வெளியான தனுஷின் 'வாத்தி' பட கிளாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம் !

Vaaththi first look poster getting viral on social media

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

Vaaththi first look poster getting viral on social media

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

Vaaththi first look poster getting viral on social media

தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

Vaaththi first look poster getting viral on social media

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

Vaaththi first look poster getting viral on social media

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். தற்போது, தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vaaththi first look poster getting viral on social media

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும் , தெலுங்கில் ‘சார்’ (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

Vaaththi first look poster getting viral on social media

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்நிலையில், தனுஷின் 39வது பிறந்தநாள் நாளை (ஜூலை 28ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், இதனை முன்னிட்டு வாத்தி படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று ஜூலை 27ம் தேதி வெளியாகி உள்ளது.

Vaaththi first look poster getting viral on social media

Share this post