'3' பட லுக்கிற்கு மாறிய தனுஷ்.. வைரலாகும் 'வாத்தி' படத்தின் வேறமாரி BTS புகைப்படம்.. அசுரன் பட நடிகர் இருக்காராமே !

Vaathi film photos getting viral ken karunas joins the team

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு வாத்தி எனவும் தெலுங்கில் சார் (Sir) எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

Vaathi film photos getting viral ken karunas joins the team

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவாவதை இப்படத்தின் போஸ்டர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது.

Vaathi film photos getting viral ken karunas joins the team

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ் நடிக்கிறார் என தெரிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தள BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும் படத்தில் கென் பணிபுரிவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vaathi film photos getting viral ken karunas joins the team

Vaathi film photos getting viral ken karunas joins the team

Share this post