இப்படி ஒரு சீனை 'வாத்தி' படத்துல இருந்து நீக்கிட்டாங்களே.. ட்ரெண்டாகும் வாத்தி Deleted Scene வீடியோ..!

vaathi deleted scene video getting viral on social media

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

vaathi deleted scene video getting viral on social media

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.

vaathi deleted scene video getting viral on social media

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார். தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார்.

vaathi deleted scene video getting viral on social media

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. தமிழில் ‘வாத்தி’ என்றும் , தெலுங்கில் ‘சார்’ (Sir) என்றும் வெளியானது. இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

vaathi deleted scene video getting viral on social media

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். சாய்குமார், சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

vaathi deleted scene video getting viral on social media

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூல்செய்தது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து டெலீட்டட் சீன் ஒன்றை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட, இப்படி ஒரு மாஸ் காட்சியை நீக்கி விட்டீர்களே, என தனுஷின் ரசிகர்கள் ஆதங்கத்தோடு வைரல் செய்து வருகின்றனர்.

Share this post