'ஹே ஊர்வசி இங்க வாடி'.. ஷூட்டிங்கில் ஆர்.ஜே.பாலாஜியின் அத்துமீறிய செயல்.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் !

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

RJ, காமெடியன், இயக்குனர், கிரிக்கெட் கமெண்டேட்டர், நடிகர், தொகுப்பாளர் போன்ற பல அவதாரத்தில் திரையுலகில் வலம் வருபவர் RJ பாலாஜி. 92.7 பிக் FM என்னும் ரேடியோ சேனலில் பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அதனைத் தொடர்ந்து, நைட் ஷோ வித் RJ பாலாஜி, டேக் இட் ஈஸி, க்ராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார்.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

இதன் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி, தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி, நானும் ரவுடி தான், புகழ், வாயை மூடி பேசவும், காற்று வெளியிடை, வேலைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், வெள்ளம் போன்ற பிரச்சனைகளின் போது மக்கள் சார்பில் ஆதாரவு குரல் கொடுத்து தோள் கொடுத்து நின்றவர்.

இவரது பேச்சு மக்களால் மிகுதியாக ரசிக்கப்பட்டு வருகிறது.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இதனால், ஆர்.ஜே.பாலாஜியை பார்த்து ஊரே கலாய்ப்பது என காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கலகலப்பாக நடந்து முடிந்தது. அப்போது பேசிய ஊர்வசி கூறுகையில், ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென பாலாஜி, ‘ஊர்வசி இங்க வாடி’ என கூப்பிட்டான்’ என கூறினார். அருகிலிருந்த ஆர்ஜே பாலாஜி, ‘அது உங்களுக்கு கேட்காதுன்னு நெனச்சேன், கேட்டுருச்சா’ என பேசி சமாளித்து விட்டார்.

Urvashi opens up about rj balaji in shooting spot in audio launch

என்ன இருந்தாலும் ஊர்வசி வயதில் மூத்தவர், வெகு காலமாக சினிமாவில் இருக்கும் மூத்த நடிகையும் கூட. அவரை கலாய்ப்பததாக இப்படியா பேசுவது? என்று ஆர்.ஜே.பாலாஜியை பலரும் வசைபாடி வருகின்றனர். ஆனால் இதனை ஊர்வசி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவனும் (ஆர்.ஜே.பாலாஜி) தன் வீட்டு பிள்ளை போல, ஒருவன் தான் என நினைத்து அதனை மேடையில் வெளிப்படையாக கூறி சிரித்து மகிழ்ந்து விட்டார்.

Share this post