'கல்யாணம் பண்றேன்னு ஊர ஏமாத்திட்டு இருக்கான்'.. விஷாலை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ !
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார்.
அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. லத்தி இறுதி கட்ட படப்பிடிப்பு சண்டை காட்சியில் அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடி ஏற்பட்டது. அவர் கீழே விழுந்து துடிதுடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இவ்வளவு மெனக்கெட்டு விஷால் ஒரு படத்திற்காக நடித்திருப்பதால் அப்படத்தின் மீதான ஆர்வம் எகிறியுள்ளது. லத்தி படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால், சூரி, ரோபோ ஷங்கர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், மேடையில் விஷாலுடன் ஜாலியாக பேசி வந்தனர். அதில் பள்ளி,காலேஜ் சென்றது தொடங்கி இப்போதும் கிரிக்கெட் விளையாடுவது வரை பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின் நடிகர் சங்க கட்டிடம் பற்றி விஷால் பேசும்போது, அதில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் பெயர் வரவேண்டும் என முன்பே அவர்களிடம் சொன்னேன். அது விரைவில் நிறைவேறப்போகிறது என்று பேசிக் கொண்டிருக்கும்போது, உதயநிதி ஸ்டாலின் குறுக்கிட்டு ‘அந்த கட்டிடத்தை கொஞ்சம் சீக்கிரமாக கட்டி முடியுங்க. கல்யாணம் பண்ணாம இவன் ஊர ஏமாத்திட்டு இருக்கான் என கிண்டலாகப் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.