போலீஸ் அவதாரத்தில் உதயநிதி ஸ்டாலின்.. வெளியான 'நெஞ்சுக்கு நீதி' தணிக்கை சான்றிதழ்.. ரிலீசுக்கு ரெடி!

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை தொடர்ந்து மக்கள் ரசிக்கும் வண்ணம் உள்ள கதையில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்ற அடையாளத்தை பதித்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

மனிதன், சைக்கோ உள்ளிட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா இயக்கத்தில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

ஷூட்டிங் மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

சாதி ஏற்றத்தாழ்வுகளை கதைக்களமாக கொண்டுள்ள இப்படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

படத்தில் காவல் அதிகாரியாக உதயநிதி நடித்துள்ளார். இந்நிலையில், தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். உடன் போஸ்டரையும் இணைத்துள்ளார்.

Udhayanidhi stalin nenjuku needhi film u a certificate

Share this post