சமந்தா இல்ல.. தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக 90ஸ்களின் க்ரஷ்.. வெளியான சூப்பர் அப்டேட் !

Trisha to act in thalapathy67 rumours getting viral

2019ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், தீனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Trisha to act in thalapathy67 rumours getting viral

முற்றிலும் மாற்றுப்பட்ட கதைகளத்துடன் அக்‌ஷன் திரைப்படமாக வெளியான கைதி மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மிக பிரபலம் அடைந்தார். கைதி விஜய் படமான பிகில் திரைப்படத்துடன் வெளியானலும் 100 கோடியளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

Trisha to act in thalapathy67 rumours getting viral

பின்னர், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ், தற்போது கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். கைதி படத்தின் reference வைத்து மினி லோகேஷ் யூனிவெர்ஸ் ரெடி செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். மேலும், விக்ரம் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை லோகேஷ் பெற்று வருகிறார்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 350 கோடியை கடந்தது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்தார் கமல் ஹாசன்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

விக்ரம் பட வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை இயக்க உள்ளார். இதை முடித்த பின் விக்ரம் படத்தின் 3ம் பாகம், கைதி படத்தின் 2ம் பாகம் மற்றும் சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Trisha to act in thalapathy67 rumours getting viral

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

Trisha to act in thalapathy67 rumours getting viral

அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் ரத்னகுமாரும் இப்படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது. தளபதி67 படத்தில் தளபதி விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படையப்பா நீலாம்பரி போல ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Trisha to act in thalapathy67 rumours getting viral

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, ஷாக்கிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். அதன்படி, அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

மேலும், இப்படத்தில் இணையவுள்ள 2 நடிகைகள் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, லோகேஷுக்கு, தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது திரிஷா தானாம். இதனால், தாம் இயக்கப்போகும் தளபதி67 திரைப்படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், 13 வருடங்களுக்கு பிறகு, விஜய் - திரிஷா மீண்டும் இணைவதன் காரணமாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Trisha to act in thalapathy67 rumours getting viral

Share this post