'கல்யாணம் பண்ணிட்டு இப்டி பண்ண சுத்தமா பிடிக்காது..' தன் திருமணம் குறித்து மனம்திறந்த திரிஷா !

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரமும், படத்தின் ப்ரோமோஷன் போது இவர் வந்த புகைப்படங்கள் என இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது.

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

சினிமாவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருந்தாலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பொன்னியின் செல்வன் விழாவில் கலந்து கொண்டிருந்த திரிஷாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறிய போது, மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டால் கூட பதில் சொல்வேன்.

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

ஆனால், யாராவது ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. திருமணத்துக்கு பிறகு விவாகரத்து எனக்கு வேண்டாம். விவாகரத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியாக இல்லாத ஒரு திருமணத்தை செய்து கொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. கொண்டு முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர் தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி த்ரிஷா மற்றும் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

trisha speaks about her marriage for the first time in ponniyin selvan press meet

இதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திரிஷா விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு ஓட்டலில் அதேபோல திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார் திரிஷா. ஆனால், இவர்கள் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற வில்லை. திருமணத்திற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இந்த திருமணம் நின்றுபோனது என கூறப்பட்டது. வருண் மணியன் தமிழில் காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post