தளபதி67 படத்தில் த்ரிஷாவின் ரோல்.. இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்..!

trisha role in thalapathy67 movie information rumoured on social media

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67

trisha role in thalapathy67 movie information rumoured on social media

இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர்.

trisha role in thalapathy67 movie information rumoured on social media

நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி வருகிறது.

trisha role in thalapathy67 movie information rumoured on social media

இப்படத்தின் மூலம் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் த்ரிஷா விஜய்யின் மனைவியாக நடிப்பதாகவும், பிளாஷ்பேக் போர்ஷனில் தான் த்ரிஷா வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

trisha role in thalapathy67 movie information rumoured on social media

Share this post