நயனுடனான பிரச்சனை.. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல நடிக்காததுக்கு காரணம்.. திரிஷா Open Talk

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

தென்னிந்திய திரையுலகில் ஒரே சமயம் அறிமுகமாகி சம போட்டியாளர்களாக இருந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா - நடிகை த்ரிஷா. முன்னணி நடிகைகளாக வலம் வரும் இவர்கள், தென்னிந்திய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தங்கள் பெயரை நிலை நாட்டியுள்ளனர். ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின் சென்ட்ரிக் சப்ஜெக்ட்களிலும் நடித்து மக்களை கவர்ந்துள்ளனர்.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

இவர்களுக்குள் இருக்கும் பிரெச்சனை குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது வழக்கம். அந்த வகையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போனது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் திரிஷா.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வெற்றி பெற காரணமாக இருந்தது நயன்தாரா மற்றும் சமந்தாவின் நடிப்பும் அனிருத்தின் இசையும் தான் காரணம் என்று சொல்லலாம்.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

இந்நிலையில், இந்த படத்தில் சமந்தாவின் ரோலில் முதலில் நடிக்க இருந்தது த்ரிஷா தான் என்றும் திரிஷாவை தான் விக்னேஷ் சிவன் முதலில் யோசித்து வைத்தார் என்றும் ஆனால், த்ரிஷா நடிக்க மறுத்துவிட்டார் என சொல்லப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திரிஷா இதுகுறித்து பேசுகையில் ‘அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கும். அது அத்துடன் முடிந்துவிட்டது, ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதே தெளிவான ஒரு விஷயம் தானே.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

நயன்தாராவிற்கும் எனக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டியாக பார்த்தால் அது நல்ல விஷயம் ஆனால், ஒருவரை ஆதரிப்பதற்காக மற்றொருவரை அசிங்கப்படுத்துவது தான் கேவலம். அது நானாக இருந்தாலும் சரி மற்ற ஒரு நடிகையாக இருந்தாலும் சரி. மேலும், நயன்தாரா உட்பட சினிமாவில் இருக்கும் எந்த ஒரு நடிகையுடனும் எனக்கு பெரிதாக நட்பு இருந்தது இல்லை. ஒருவரிடத்தில் நட்பு இருந்தால் தான் பிரச்சனை ஏற்படுவதற்கு பேசாமல் போனால் வருத்தப்பட வேண்டும்.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

ஆனால், எனக்கு எந்த நடிகை உடனும் அப்படி ஒரு நட்பு இருந்தது கிடையாது’ என்று கூறி இருக்கிறார். திரிஷாவிற்கும் நயன்தாராவிற்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது உண்மை தான். நயன்தாரா பில்லா பட சமயத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் சக நடிகைகளுடன் இருக்கும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது.

trisha opens up about friendship with nayanthara and not acting in kaathvaakula rendu kadhal

அப்போது திரிஷா உடனான பிரச்சனை குறித்து பேசிய நயன்தாரா ”எனக்கு நண்பரா இருந்தால் நானே போய் பேசுவேன். எனக்கும் திரிஷாவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்று பேப்பரில் எல்லாம் எழுதினார்கள். ஆனால், அந்த அளவிற்கு எல்லாம் பிரச்சனை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காது அவ்ளோ தான்’ என்று பேசி இருந்தார் நயன்தாரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்க்கும் போது திரிஷா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்காமல் போன காரணம் நயன்தாரவுடனான பிரச்சனையாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Share this post