சிம்பிளா 'Blue Saree'ல ஒரே ஒரு லுக்.. ட்ரெண்டாகி இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷா ஃபோட்டோ !

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

இதனைத் தொடர்ந்து, அண்மையில், ‘தி ரோட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீர் நடிக்கிறார். மேலும், தெலுங்கு வெப் சீரிஸில் திரிஷா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் பெயர் ‘பிருந்தா’. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

இந்நிலையில், நடிகை திரிஷா, ‘தி ரோடு’ என்னும் படப்பிடிப்பின் போது, புடவையில் ஜொலிக்கும் BTS புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீல நிற புடவையில், நடிகை திரிஷா இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அழகில் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே ஜொலிக்கும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trisha krishnan latest blue saree photos getting viral on social media

Share this post