விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முன்னணி தமிழ் நடிகர் !
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 40 வருட திரையுலக வாழ்க்கையில் 150 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கிய விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். தற்போது உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
தீவிர உடல்நல குறைவால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டபோது, அவருக்கு கண்ணாடி அணிவிக்க அவரது மனைவி முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. விஜயகாந்துக்கா இந்த நிலை என ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.
இன்று விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி விஜயகாந்த் அவர்களின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார். “என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுகிட்டாரு.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. ” எனவும், நடிகர் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல கடமைப்பட்டு இருப்பதாக கார்த்தி மேலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
“என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுகிட்டாரு.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. ”
— Sun News (@sunnewstamil) August 25, 2022
- விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி#Sunnews | #Karthi |#Vijayakanth | @Karthi_Offl pic.twitter.com/FXFeTQtkU4