அஜித்தின் துணிவு திரைப்படம் Ban? ரசிகர்கள் அதிர்ச்சி

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் வீடியோ தாறுமாறு சாதனையும் செய்து வருகிறது. வரும் பொங்கல் ஜனவரி 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் அதிக மோசமான வார்த்தைகள் இருக்கிறது என்று சென்சார் குழு நிறைய இடத்தை கட் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு இடையில் படத்தின் நிறைய Violence இருக்கிறது என்று சவுதியில் படத்தை Ban செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.