துணிவு பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.. தாறுமாறாக ட்ரெண்டாகும் போஸ்டர்!
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.
இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இப்படத்தின் சில்லா சில்லா என்ற சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. அப்பாடல் வருகிற 17ம் தேதி மாலை 5:04 மணிக்கு வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.