அடேங்கப்பா.. 'துணிவு' படத்துல இத்தன வார்த்தைக்கு பீப்'ஆ..? சீன்கள் குறித்து வெளியான மொத்த தகவல்..!

thunivu censor board certificate and mute details released with runtime details

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்கள் நல்ல விமர்சனம் மற்றும் வசூல் பெற்ற நிலையில், துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

thunivu censor board certificate and mute details released with runtime details

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களின் புரோமோஷன் பணிகளும் படுவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டது.

thunivu censor board certificate and mute details released with runtime details

இதைத் தொடர்ந்து, ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் பட சாயலில் இருப்பதாக மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டனர்.

thunivu censor board certificate and mute details released with runtime details

இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் ஹாலிவுட் படமான Inside Man-ன் காப்பி என்பது போல மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இப்படம் சென்சாருக்கு சென்றுள்ளது. சென்சாரில் படத்தில் இருந்த பல கெட்ட வார்த்தைகளை நீக்கியுள்ளது சென்சார் போர்டு. மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடம் 48 நொடிகள் போன்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

thunivu censor board certificate and mute details released with runtime details

மேலும், இப்படத்தில் வரும் வடக்கன்ஸ் என்கிற வார்த்தைக்கு பீப் போட்டதாகவும், காசேதான் கடவுளடா பாடலில் வரும் காந்தி என்கிற வார்த்தைக்கு பீப் போடப்பட்டதாகவும், ஒரு சில காட்சிகளில் வந்த கெட்ட வார்த்தை என மொத்தம் 17 இடங்களில் மியூட் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post