காப்பி சர்ச்சையில் சிக்கிய தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'.. வைரலாகும் போட்டோ !

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனனின் திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக ஷோபனாவும், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இதன் அறிவிப்பு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் ‘தாய் கிழவி’ ‘மேகம் கருக்காதா’ என்ற 2 பாடல்கள் வெளியானது. தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு “திருச்சிற்றம்பலம்” படத்தின் மூன்றாவது பாடலுக்கான போஸ்டர் வெளியானது. வித்தியாசமான அந்த போஸ்டரில் தனுஷ் வித விதமான பல லுக்கில் இருந்தார். மிகவும் கலர்ஃபுல்லாக இருந்ததால் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆனது.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

ஆனால், இந்த போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் பலர், இது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஹே சினாமிகா’ படத்தின் போஸ்டர் ஒன்றையும் ஒப்பிட்டு இதனுடைய காப்பி தான் திருச்சிற்றம்பலம் போஸ்டர் என பதிவிட்டு வருகின்றனர்.

Thiruchitrambalam poster caught in copy issue photo getting viral on social media

Share this post