வெளியான 'மேகம் கருக்காதா' பாடல் மேக்கிங் வீடியோ.. வாவ் இதுவே சூப்பரா இருக்கே.. ட்ரெண்டாகும் வீடியோ !
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியிருந்தார்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்தது.
உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழி ஷோபனாவாக நித்யா மேனன், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்தனர்.
தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆன நிலையில், இவருக்கு சில படங்கள் கைகொடுக்கவில்லை. இதனால் இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நல்ல வசூலை குவித்தது
இப்படத்தின் வெற்றியால் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் நானே வருவேன், வாத்தி போன்ற படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். நீண்ட இடைவெளிக்கு கிடைத்த வெற்றி என்பதால் படக்குழுவினருக்கு பார்ட்டியும் தனுஷ் கொடுத்தார்.
இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த மேகம் கருக்காதா பாடலுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோ செய்து வைரல் ஆக்கினர். இந்நிலையில் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி ட்விட்டரில் வெளியிட்டு இப்பாடலின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
Immensely cherished choreographing @dhanushkraja Sir #RaashiKhanna ma'am & @MenenNithya garu for #MeghamKarukatha 😍
— Jani Master (@AlwaysJani) September 26, 2022
Thank you for the phenomenal response to the song & #Thiruchitrambalam ❤
Here's how it went behind the screens 🤩 pic.twitter.com/FtXlsa3jgk