'தீ தளபதி' - அனிருத் பாடலின் காப்பி.. வீடியோவுடன் பாடலை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தில் இருந்து ‘தீ தளபதி’ என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் கடந்த டிசம்பர் 4ம் தேதி அறிவித்ததை போல வெளியானது. சிம்புவின் குரலில் உருவாகியுள்ள தீ தளபதி பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது. ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்த இப்பாடல் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.
அது என்னவென்றால், ரஞ்சிதமே பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியது போல, இப்பாடலும் காப்பியடித்து போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ‘வரவா வரவா’ பாடலை காப்பியடித்து தீ தளபதி இசையமைக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது. அதே போல் கன்னட திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும், நான் ஈ படத்தில் வரும் ‘ஈ டா ஈ டா’ பாடலையும் சேர்ந்த கலவை தான் தீ தளபதி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள். இதன் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
Athu thee thalapathy illa
— Sober style (@Soberguru) December 4, 2022
Ani oda varava varava Nan thiruppi varva song oda copy#Thunivu #Ajithkumar #THUNIVURulingInternet pic.twitter.com/MIHVWXtNgV
Enna Thaman annayya idhellam..#Thunivu pic.twitter.com/11dSBR5TDt
— Trollywood (@TrollywoodX) December 4, 2022
#TheeThalapathy Wasted😂 Veppilai Veppilai song copy 🤣#VarisuSecondSingle #Ajithkumar𓃵 #THUNIVURulingInternet #ThunivuPongal2023 #Thunivu #HVinoth pic.twitter.com/bPtVSuwUgY
— Sakthi Vaas (@Sakthi_Vaas) December 4, 2022