சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக 'அந்த' விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!

The secret revealed by Bailwan about the marriage of Napoleon's son

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு அரியவகை நோயால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் நெப்போலியன் சென்று வந்த நிலையில், தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

The secret revealed by Bailwan about the marriage of Napoleon's son

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் நெப்போலியன் மகன் தனுஷ் குறித்தும் அவருடைய திருமணம் குறித்தும் இணையதளத்தில் YouTube பக்கத்தில் பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தனுஷ் திருமணம் செய்யப் போகும் பெண் நெல்லையை சேர்ந்தவர்.

The secret revealed by Bailwan about the marriage of Napoleon's son

மணமகள் வீட்டுக்கு வந்து மணமகன் தாலி கட்ட வேண்டும். ஆனால், தனுஷின் உடல்நிலை சரியில்லாததாலும் விமானத்தில் அவரால் வர முடியாத காரணத்தாலும் கப்பலில் வருவதற்காக சொகுசுகப்பல் ஒன்றை நெப்போலியன் புக் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், திருமணம் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால், மணமகளை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று அங்கே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Share this post