ஜிமிக்கி கம்மல் + வா முனிமா = வாடிவாசல்.. என்ன கொடும சரவணன் இது? தி லெஜெண்ட் பாடலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

பிரபல கடையான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் சரவணன் அருள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் என்றாலே நினைவுக்கு வருபவர்.

தனது கடைகளின் விளம்பரங்களில் நடிகர்களை நடிக்க வைக்காமல் இவரே பல விதமான உடைகளை அணிந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகளை நடித்துள்ளனர்.

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

இந்நிலையில், சரவணன் சமீபத்தில் இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ‛தி லெஜண்ட்’ என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா வரும் மே 29ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதோடு, முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலரையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

இதனிடையே இப்படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியான நிலையில், அண்மையில் இரண்டாவது பாடலான வாடி வாசல் என்ற வீடியோ பாடல் கடந்த 20ம் தேதி வெளியானது.

கிராமத்து பின்னணியில் திருவிழா மாதிரியான செட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஜோடியாக நடனமாடி உள்ளார்.

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

இந்த பாடல் தற்போது நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது. வாடி வாசல் பாடல் பல பாடல்களின் மெட்டுகளில் இருந்து உருவாக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரபுதேவாவும் நடிகை ரோஜாவும் ஆடிய வா முனிமா வா முனிமா வா, நடிகர் விக்ரமின் தூள் படத்தின் கப்பகிழங்கு பாடல், ஜிமிக்கி கம்மல் என பல பாடல்களின் கலவையாக உள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

The legend vaadi vaasal song has been trolled as copy cat song

பழைய பாடல்களின் மெட்டுக்களை பட்டி டிங்கிரி செய்து வாடி வாசல் பாடல் உருவாகியிருந்தாலும் அண்ணாச்சியின் ஆட்டம் வேர லெவல் என்று சொல்லலாம் என கம்பேர் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Share this post