Viral Video: "WARNING: இப்டி ஆபாசமா படம் எடுக்காதீங்க.. பிஞ்சு பெண் குழந்தைகளும் தொல்லைகளை.." சிறுமி video வைத்து விளாசிய இயக்குநர்..
ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார்’ படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பதான். இப்படத்திலிருந்து பெஷாராம் ரங் பாடல் வெளியானது.
அந்த பாடலில் பிகினி உடைகளில் நடிகை தீபிகா படுகோன் ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம் ஆபாச நடிகைகள் ஆடுவதை போல இருப்பதாகவும், சாஃப்ட் பார்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கவர்ச்சியை குறைத்து நடித்து வந்த தீபிகா படுகோன் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு கெஹ்ரியான் படம் திரும்பினார்.
ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பெஷாராம் பாடலில் அவர் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பதை ஏகப்பட்ட இந்து அமைப்புகள் கண்டித்தன. கவர்ச்சியின் உச்சம் தோட்ட பெஷாராம் பாடல் 135 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது விளாசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுமி ஒருவரை வைத்து பாலிவுட் இயக்குநர்களே, நடிகர்களே நல்ல கதைகளை படமாக எடுங்கள், ஆபாசத்தை இளைஞர்கள் மத்தியில் விதைக்காதீர்கள்.
அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனால், பாலியல் ரீதியாக பல தொல்லைகளை பிஞ்சு பெண் குழந்தை உள்பட பலரும் அனுபவிக்கிறோம் என பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ‘வார்னிங்’ கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளும், நடிகர்களும் விட்டால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக முழு நிர்வாணமாகவே நடித்து விடுவார்கள் போல.. அந்த அளவுக்கு ஓடிடியில் ஆபாச படங்கள் அதிகரித்து வருகின்றன. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றவர்களே இப்படி எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டினால் இளம் நடிகைகள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கு செல்வார்கள் என்றும் ட்ரோல்கள் கிளம்பி உள்ளன.
WARNING:#PnV video against Bollywood. Don’t watch it if you are a Secular. pic.twitter.com/7wKPX4A8Ev
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 28, 2022