'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா'.. 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்
ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனைத் தொடர்ந்து, கலைஞர் தொலைக்காட்சியில் கலா மாஸ்டரின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார்.
இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அவர்களும் இவர்களும், நீதானா அவன் போன்ற திரைப்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். பின்னர், தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
விளையாட வா, அட்டகத்தி, புத்தகம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, மனிதன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். காக்கா முட்டை மற்றும் கனா திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், தனது திறமை மூலம் முன்னேறி வருகிறார். இந்நிலையில், ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் டிரைலர் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கிறார். இவர் பாடகி சின்மயி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் நேற்று தீபாவளி தினத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும் கனவுகளுடன் ஒரு வீட்டுக்கு மருமகளாக செல்லும் ஒரு பெண் தனது ஆசை, கனவுகள் ஆகியவற்றை முடக்கி விட்டு வெறும் அடுப்பங்கரையில் மட்டுமே வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது.
கணவர், மாமனார் இருவரும் அதிகார தோரணையில் கட்டளையிடுகின்றனர். அதனை அவர் எப்படி சமாளித்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதும் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் மலையாளத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்த கேரக்டரில் தான் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.