'தளபதி67' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. படத்தில் யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க..
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக தளபதி விஜய் உடன் தளபதி67ல் கூட்டணி அமைக்கவிருக்கிறார்.
இப்படம் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு இதன் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கூறி வந்தார். வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிட்டதால், தளபதி67 குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று ’தளபதி 67’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்த அறிவிப்பில்: 7ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக தளபதி விஜய் அவர்களுடன் இணைவதை பெருமையாக கருதுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் - லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு - லலித், ஜெகதீஷ்
இசையமைப்பாளர் - ராக்ஸ்டார் அனிருத்
ஒளிப்பதிவாளர்: மனோஜ் பரமஹம்சா
சண்டை பயிற்சியாளர்: அன்பறிவ்
படத்தொகுப்பாளர்: பிலோமின் ராஜ்
கலை இயக்குனர்: சதீஷ்குமார்
நடன இயக்குனர்: தினேஷ்
வசன எழுத்தாளர்: லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி
நிர்வாக தயாரிப்பாளர்: ராம்குமார் பாலசுப்பிரமணியன்
மேலும் ’தளபதி 67’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.