பூஜையை தொடர்ந்து 'தளபதி67' டீசர் குறித்து வெளியான செம அப்டேட்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

thalapathy67 new update rumours getting viral on social media

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

thalapathy67 new update rumours getting viral on social media

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்‌ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

thalapathy67 new update rumours getting viral on social media

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தினால், விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். வசூலிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

thalapathy67 new update rumours getting viral on social media

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில், நேற்று தளபதி67 படத்தை AVM ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

thalapathy67 new update rumours getting viral on social media

பூஜையில் இருந்த எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்தெந்த நட்சத்திரங்கள் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. இப்படத்தின் போட்டோஷூட் இன்று 06.12.2022 நடைபெறுகிறது. அதன்பின் 07.12.2022 - 09.12.2022 வரை இப்படதின் அறிவிப்பு டீசரின் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. விக்ரம் பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்பதால் அதை காண விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Share this post