நடிகர் விஜய் பிறந்தநாளன்று தளபதி67 குறித்த அறிவிப்பு வீடியோ ? வெளியான தகவல் !

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

தற்போது, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பின்னர், விஜய் செய்து தளபதி 67 படத்தை இவர் இயக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் படு வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு, வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதுகுறித்த அப்டேட் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து, விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

இப்படத்தில் கைதி பட பாணியில் விஜய்க்கு பாடல் காட்சிகள் மற்றும் ஜோடி கிடையாது என்றெல்லாம் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இது குறித்து, இதுவரை மெளனமாக இருந்து வந்த லோகேஷ், தற்போது இது குறித்த செய்தி ஒன்றிற்கு ரியாக்ட் செய்துள்ளார்.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

பிரபல இயக்குனரான ரத்னா குமார் விஜய்யின் டயலாக் புகைப்படத்தை பதிவிட்டு, விக்ரம் பட பாணியில் “பாத்துக்கலாம்” என பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்திருந்தார்.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

மேலும், பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில், தளபதி67 எப்படி இருக்கும் என கேட்டதற்கு, கிளாஸா மாஸா இருக்கும் என பதிலளித்திருந்தார்.

மேலும், தளபதி67 படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்து இருந்தார்.

Thalapathy67 announcement video expected on thalapathy vijay birthday

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில், அவரின் பிறந்தநாள் அன்று விக்ரம் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிட்டதை போலவே, அதேபோல் தளபதி67 படத்திற்கு வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் எனவும் தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this post