ஸ்டைலான லுக்குடன் தளபதி66 குறித்து வெளியான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் சென்றுள்ள தளபதி விஜய், மரியாதை நிமிர்த்தமாக தெலுங்கானா முதலமைச்சர் சந்தரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாக பரவி வந்தன.
தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது.
இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் 2ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோரின் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியானது.
புதிய அப்டேட்டாக தெலுங்கில் தளபதி66 ‘வரசுடு’ என்றும் , தமிழில் ‘வாரிசு’ என்றும், தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாகவே, அதாவது வரும் ஜூன்-21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Thalapathy66FirstLook on 21st at 18:01 🔥🔥🔥#Thalapathy @actorvijay na @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_official @karthikpalanidp pic.twitter.com/8z9OPtvMdK
— Jagadish (@Jagadishbliss) June 19, 2022