தளபதி66'ல் 2 ஹீரோயின்ஸ்.. வெளியான மாஸ் அப்டேட்.. இப்டி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கலயே.. We are waiting !

Thalapathy66 2 heroines to act 2nd heroine name will be revealed soon

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66. தமிழில் தோழா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் வம்சி.

Thalapathy66 2 heroines to act 2nd heroine name will be revealed soon

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம், நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஜெயசுதா, சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பலர் இணைவதாக படக்குழு சார்பில் அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானது. மேலும், அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இதில் ஒன்று சென்டிமென்ட் பாடல் எனவும் கூறப்படுகிறது. இசையமைப்பதில் பெரும்பாலான பணிகளை தமன் முடித்து விட்டாராம்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, தளபதி 66 ஷுட்டிங்கில் பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை ஒரு சீன் கூட எடுக்கப்படவில்லை எனவும் சென்னையில் செட்டில் தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Thalapathy66 2 heroines to act 2nd heroine name will be revealed soon

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர். தற்போது, ஹைதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, அன்னபூர்ணா ஸ்டூடியோ போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை குறித்து மேலுமொரு அப்டேட் வெளியாகவுள்ளது. இது குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தற்போதைய லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 66 படத்தில் இரண்டு ஹீரோயின்கள், இரண்டாவது ஹீரோயின் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தளபதி66 படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்படுவதால், இரு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகையை தான் 2வது ஹீரோயினாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy66 2 heroines to act 2nd heroine name will be revealed soon

Share this post