ஜவான் கூட்டணியில் விஜய் ? அட்லீ, ஷாருக்கான் உடன் தளபதி எடுத்த மெர்சல் போட்டோஸ் வைரல் !
சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.
OTT தளமான அமேசான் ப்ரைம், ராயப்பன் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்யவே, அதற்கு அட்லீ, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என கூறியிருந்தார். இதனால், தளபதி68 அட்லீ தான் இயக்கப்போகிறாரா என்ற பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.
இந்நிலையில், ஷாருக்கான் வைத்து அட்லீ திரைப்படம் இயக்குவது குறித்து பல தகவல் வெளியானது. இன்று, ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவது குறித்தும், படத்தின் பெயர் ஜவான் எனவும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வித்தியாசமான லுக்கில் ஷாருக்கான் இருப்பது, அந்த தோரணை அனைத்தும், பார்க்கையில் இதுவும் அட்லீக்கு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிகிறது. மேலும், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஷூட்டிங் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் ஸ்டூடியோவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தளபதி விஜய் ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் ஒன்று வெளியானது. இதற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் ஸ்டூடியோவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இருவருடனும் அட்லீ எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அட்லீ, ‘இதைவிட வேறென்ன வேணும்’ என பதிவிட்டுள்ளார்.
ஜவான் படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அட்லீ, ஷாருக்கான் உடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் மூலம் அவர் ஜவானில் கெஸ்ட் ரோலில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறப்படுகிறது.
What more can I ask on my bday , the best bday ever wit my pillars. My dear @iamsrk sir & ennoda annae ennoda thalapathy @actorvijay ❤️❤️❤️ pic.twitter.com/sUdmMrk0hw
— atlee (@Atlee_dir) September 22, 2022