தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகள் திவ்யாவுடன் தளபதி விஜய்.. வைரலாகும் அப்பா - மகள் க்யூட் வீடியோ
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.
எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.
மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்திற்காக நடிகர் விஜய் சன் டிவியில் ஒளிபரப்பான பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியை மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் தொகுத்து வழங்கினார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் விஜய் மகள் திவ்யா, விஜய்க்கு போன் கால் செய்து பேசினார். பல வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியின், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.