வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தா ஜெமினி கணேசனா? இதை கவனிச்சீங்களா..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘அம்மா பாடல்’என 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். வழக்கம் போல விஜய் மிகவும் எளிமையாக அதே சமயத்தில் ஸ்டைலாக விழாவிற்கு வருகை தந்தார்.
இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் வாரிசு டிரைலரை ட்ரோல் செய்து வருகிறார்கள். வாரிசு டிரைலரை பார்ப்பதற்கு சீரியல் போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல் இது வம்சியின் முந்தைய படங்களை சேர்ந்து பார்த்தது போல் இருப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.
அதேபோல், வாரிசு டிரைலரில் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தாவாக ஜெமினி கணேசனை காட்டுவார்கள் போலத் தெரிகிறது. இப்படி ட்ரோல்கள் ஒருபக்கம் நடந்து வந்தாலும், வெளியான 11 நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர், ‘வலிமை’ படத்தில் அஜித்தின் தந்தையாக ஜெய்ஷங்கர் புகைப்படத்தைக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.