தளபதி ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் சூப்பர் நியூஸ் வெளியிட்ட டான்ஸ் மாஸ்டர் ஜானி!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து, அந்த பாடலின் நடன இயக்குனர் வெளியிட்டுள்ள பதிவு செம வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் ஒன்று பல்லாரியில் உள்ள அழகிய இடத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
இது ஒரு ஸ்ட்ரெஸ் பாஸ்டரான பாடலாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். சில மிருக பொம்மைகளுடன் இருக்கும் வித்தியாசமான செட் புகைப்படத்தையும் இவர் பகிர்ந்துள்ளார். ஜானி மாஸ்டரின் பதிவும், அவர் வெளியிட்டுள்ள வேடிக்கையான புகைப்படங்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
One more Chartbuster loading from @actorvijay Sir & @directorvamshi Sir's #Varisu 💥
— Jani Master (@AlwaysJani) November 21, 2022
Shot in exquisite locations of #Ballari. Spent some crazy moments. Grateful to these lovely people for being so welcoming & supporting.
Keep your expectations high😎#ThalapathyVijay pic.twitter.com/ESQ4XZ96Y7