தன் ரசிகர்கருக்காக தனது ட்விட்டரில் விஜய் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பவர். தன்னை கொண்டாடும் ரசிகர்களை தற்போது நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். நடிகர் விஜய் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை அதில் வெளியிட்டு வருகிறார். ட்விட்டரில் 40 லட்சம் பாலோயர்களை கொண்டுள்ள விஜய், தனது ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் டிபி-யாக வைத்துள்ளார். அந்த ஓவியம் இலங்கையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வரைந்த ஓவியம் ஆகும். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.