‘Sorry நெல்சா.. இனி ட்ரோல் பண்ண மாட்டோம்..' விஜய்க்கு நெல்சன் போட்ட பதிவால் எமோஷனல் ஆன விஜய் ரசிகர்கள் !

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

தனியார் சேனலில் பணிபுரிந்து வந்த நெல்சன் திலீப்குமார், முதன் முதலாக சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோரை வைத்து வேட்டை மன்னன் திரைப்படத்தை தொடங்கும் பணிகளில் இறங்கினார். சில பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

இதன் பின்னர், 2018ம் ஆண்டு, நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உள்ளிட்டோர் நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அர்ச்சனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் தான் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, சதிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷனை கொடுத்திருந்தார் நெல்சன் இருந்தாலும் இப்படத்தில் அது ஒர்க்-அவுட் ஆகவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வருகின்றனர்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

பல லாஜிக் இல்லாத சீன்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் சிலர் கலாய்த்து வந்தனர். இப்படம் 1 மாதம் கூட முழுமையாக திரையரங்குகளில் ஓடாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனால், மீண்டும் சில சீன் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகினறனர்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

அந்த வகையில், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் விமானத்தை இயக்கும் வீடியோ பதிவிட்டு மிகுந்த பேச்சு பொருளாக மாறியது. மேலும், தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலிப்குமாரை ட்ரோல் மீம்ஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

பொதுவாக நெல்சன் படங்களை போல நிஜத்திலும் ஜாலியான ஒரு நபர். அவர் அளித்த பல பேட்டிகளில் அவர் மிகவும் ஜாலியாக பேசியிருப்பார். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் ஒரு விருது வழங்கும் விழாவில் பெரிதாக பேசாமல் போய் அமர்ந்தது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்சன், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் சார். உங்களின் கனிவு, நம்பிக்கை, உத்வேகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. என் வாழ்க்கையில் என்னுடைய நண்பனாகவும், அண்ணனாகவும் நலன் விரும்பியாகவும் இருப்பதற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

நெல்சனின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் நெல்சனிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லாமல் மிகவும் ட்ரோல் செய்துவிட்டதை எண்ணி வருத்தப்படும் விஜய் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். தற்போது நெல்சன், ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். பீஸ்ட் படத்தில் விட்டதை இந்த படத்தில் நெல்சன் நிச்சயம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

Thalapathy vijay fans apologizes for trolling to nelson

Share this post