இயக்குனரின் முடிவை மறுத்த விஜய்.. வைரலாகும் தகவல் !

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிட்டது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

அந்த அறிவிப்பில், இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர்.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே செட்டில் ஷூட் செய்யப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ஐதராபத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு மாத படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

இந்நிலையில், சூட்டிங் முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ள புகைப்படம் வைரலாகி வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 2ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோரின் புகைப்படங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியானது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

புதிய அப்டேட்டாக தெலுங்கில் தளபதி66 ‘வரசுடு’ என்றும் , தமிழில் ‘வாரிசு’ என்றும், தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாகவே, அதாவது நேற்று அதாவது ஜூன் 21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட போவதாக அறிவிப்பு வெளியானது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

அதன்படி, தளபதி66 பெயர் ‘Varisu’ என அறிவிக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் தளபதி விஜய் கோட் சூட் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். The Boss Returns என படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

தளபதி விஜயின் பிறந்த நாளையொட்டி varisu படத்தின் 2வது லுக் வெளியானது. அதில் காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்திருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது, varisu படத்தின் 3வது லுக் வெளியானது. பைக் மேலே செம ஸ்டைலிஷாக விஜய் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியானது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

இதற்கிடையே 2002ல் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான “ஆல் தோட்ட பூபதி” பாடலை ரீமிக்ஸ் செய்ய ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு எப்படி செய்ததோ அது போல விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy vijay denies varisu director vamsi decision on his birthday

விஜய்யின் பிறந்த நாளன்று, வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது அனைவரும் அறிவர். படக்குழு அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். விஜய்யின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பிற்கு விடுமுறை விட வேண்டும் என இயக்குனர் வம்சி கூறியுள்ளாராம். ஆனால், அதை மறுத்த நடிகர் விஜய், வேண்டாம்.. எனக்காக படப்பிடிப்புக்கு விடுமுறை விட வேண்டாம். படப்பிடிப்பு நடக்கட்டும் என்று கூறியுள்ளாராம். இந்த தகவல் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post