ஆர்வத்தில் விஜயின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்.. உடனே விஜய் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தி

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் ரஞ்சிதமே பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய், அலோசனை மேற்கொண்டதோடு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். இப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவில் இந்தப் படம் பொங்கலன்று ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

thalapathy vijay appeared in front of his fans after meeting video and photos getting viral

இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என மாடர்ன் அரசியல்வாதி போல் வந்திறங்கிய விஜய்க்கு அங்கு இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவாரு அலுவலகத்திற்குள் சென்ற விஜய் அங்கிருந்து தனது ரசிகர்கள் ஒவ்வொருவராக் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி ரசிகர்களுக்கு சில அட்வைஸ் சொல்லியுள்ளார். அதாவது, முதலில் குடும்பத்தினரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள், தயவுசெய்து இனிமேல் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

மொத்தமாக இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. இதன் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது. இந்நிலையில் காரில் அமர்ந்த விஜயின் கன்னத்தை ரசிகர் ஒருவர் கண்ணாடி வழியாக விட்டு கிள்ளினார். இதனால் பதறிப்போன நிர்வாகிகள் அந்த ரசிகரை பிடித்து பின்னே தள்ளினர். மேலும் விஜய் சிரித்துக் கொண்டே தனது கார் கண்ணாடியை வேகமாக மூடிக்கொண்டு கிளம்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Share this post