ஜெயிலர் இந்த படத்தின் காப்பியாமே ? லீக்கான தகவல்!

தனியார் சேனலில் பணிபுரிந்து வந்த நெல்சன் திலீப்குமார், முதன் முதலாக சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோரை வைத்து வேட்டை மன்னன் திரைப்படத்தை தொடங்கும் பணிகளில் இறங்கினார். சில பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதன் பின்னர், 2018ம் ஆண்டு, நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உள்ளிட்டோர் நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அர்ச்சனா மற்றும் பலர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் தான் பீஸ்ட். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, சதிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்ஷனை கொடுத்திருந்தார் நெல்சன் இருந்தாலும் இப்படத்தில் அது ஒர்க்-அவுட் ஆகவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வருகின்றனர்.
பல லாஜிக் இல்லாத சீன்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் சிலர் கலாய்த்து வந்தனர். இப்படம் 1 மாதம் கூட முழுமையாக திரையரங்குகளில் ஓடாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனால், மீண்டும் சில சீன் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகினறனர்.
அந்த வகையில், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் விமானத்தை இயக்கும் வீடியோ பதிவிட்டு மிகுந்த பேச்சு பொருளாக மாறியது. மேலும், தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலிப்குமாரை ட்ரோல் மீம்ஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
பொதுவாக நெல்சன் படங்களை போல நிஜத்திலும் ஜாலியான ஒரு நபர். அவர் அளித்த பல பேட்டிகளில் அவர் மிகவும் ஜாலியாக பேசியிருப்பார். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் ஒரு விருது வழங்கும் விழாவில் பெரிதாக பேசாமல் போய் அமர்ந்தது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இவர் தற்போது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பீஸ்ட் படத்தில் விட்டதை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இவர் எடுத்த எல்லா திரைப்படமும் எதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி எனவும், தற்போது எடுத்து வரும் ஜெயிலர் படமும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.
2018ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம், 2013ம் ஆண்டு ராசன் மார்ஷல் தர்பர் இயக்கத்தில் வெளியான We are the Milers எனும் பிரபல ஹாலிவுட் படத்தின் சாயல் உள்ளதாக கூறி வந்தனர்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர் ஹாலிவுட் படமான தி கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்வீஸ் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
மால் காப் எனும் ஹாலிவுட் படத்தின் காப்பியாகவே வெளியான யோகி பாபுவின் கூர்கா படத்தை போலவே பீஸ்ட் படம் வெளியானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு எந்த ஹாலிவுட் படத்தின் கதையை ஆட்டையை போட்டு இருக்கிறார் என ஏகப்பட்ட பிரிசன் படங்களின் பெயர்களை போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில், ஜெயிலர் படம் கான் ஏர் எனும் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை தழுவித் தான் உருவாக உள்ளதாக சீக்ரெட் தகவல்கள் கசிந்துள்ளன.