கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் காட்டிய அன்பு..! 35 அடியில் பெரிய கட் அவுட்.! வேற லெவல்!

Telugu Movie Sarkaru Vaari Paata Actress Keerthy Suresh Poster Feet Andhra

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை தொடர்ந்து `சர்க்காரு வாரி பட்டா’ படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்.இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குனராகவும் பணிபுரிந்தனர்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக இணைந்துள்ள படம் சர்க்காரு வாரி பட்டா.

‘சர்க்காரு வாரி பட்டா’, படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை ‘கலாவதி’ என சொல்லி அழைத்து ஒரு பாடல் உருவாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடலும் ஹிட் அடித்துள்ளது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Telugu Movie Sarkaru Vaari Paata Actress Keerthy Suresh Poster Feet Andhra

அதே போல் ஐத்ராபாத்தில் உள்ள சுதர்சன் திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். மிகவும் அரிதாக ஒரு இளம் நடிகைக்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ள நிகழ்வு செம்ம வைரலாகி வருகிறது. 35 அடி உயரமுள்ள இந்த கட் அவுட்டில் கலாவதி பாடலில் வரும் கீர்த்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Telugu Movie Sarkaru Vaari Paata Actress Keerthy Suresh Poster Feet Andhra

Share this post