Viral Video: தஞ்சை பெரிய கோவிலை அவமதித்து விளம்பரம் செய்த பிரபல நகைக்கடை? நயன் விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை..

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர். சரியாக விதிமுறையை கடைபிடிக்கவில்லை என்று சர்ச்சை எழவே, தாங்கள் 2016ம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், 2021ம் ஆண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை தொடங்கியதாகவும் சாட்சிகளை விசாரணையில் சமர்ப்பித்தனர்.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

தற்போது இவர் நடித்துள்ள பிரபல நிறுவனத்தின் விளம்பர படத்தில் இவரது போட்டோவுடன் இடம்பெற்றுள்ள விஷயம் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பெருமைக்குரிய கட்டமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் தஞ்சாவூர் பெரியகோவில் 10ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் அவர்களால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 1000 வருடங்களை தண்டி தற்போது வரை கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலை கட்டும்போதே அப்போது நிகழ்த்த பல நிகழ்விகளை கோவிலின் கல்வெட்டுகளில் பதிவிட ஆணையிட்டார் ராஜ ராஜா சோழன்.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

இதன் மூலம் கோவிலை கட்டமைத்த மக்களின் அணைத்து பெயர்களும், அதற்கு முன்னர் நடந்த பல நிகழ்விகளையும் அந்த கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தமிழ் மக்களின் பல சரித்திர படைப்புகள் அடுத்தடுத்த படையெடுப்புகளில் அளிக்கப்பட்ட நிலையில் தஞ்சை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் நமக்கு அப்போது வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்கை முறைகள், அப்போது என்ன நடந்தது? யாரால் இந்த கோவில் கட்டப்பட்டது, யார் யாரெல்லாம் இந்த கோவிலை கட்ட உதவி செய்த்தனர்? என்ற பல தகவல்கள் அந்த கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

இந்நிலையில் தனிஷ்க் என்ற தங்க நகைக்கடை விளம்பரத்தில் நடிகை நயன்தாரா புகைப்படத்தின் காலுக்கு கீழே தமிழ் மக்களால் போற்றப்படக்கூடிய தஞ்சாவூர் பெரியகோவிலின் நுழைவு வாயிலில் கல்வெட்டு இருப்பதை போல இருக்கும் புகைப்படத்துடன் ஒரு விளம்பரத்தை செய்திருந்தனர். மேலும் அந்த கல்வெட்டுகளில் சுடுகாடு என்று 9 முறை எழுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு அவர்களை பழிவாங்கி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒருவர் இந்த விளம்பரத்தை கண்டித்து யூடியூபில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

tanishq advertisement and nayanthara ad creating issue on social media video viral

இந்த வீடியோ வைரலாகவே பலரும் ஒரு நடிகையின் அதுவும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகையின் புகைப்படத்திற்கு கீழே தஞ்சாவூர் பெரியகோவிலின் புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தியதாக கடுமையாக விமரிசித்து வருகின்றனர். மேலும் இதனை போன்ற மற்ற நாடுகளில் இப்படி வரலாற்று பெருமையை செய்திருந்தால் அந்த நிறுவனமே முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கும் என்றும் நம்முடைய நாட்டில் தான் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கிறது என்றும் தங்களுடைய ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Share this post