'சிம்புவ கல்யாணம் பண்ண ஆசை தான்..' ஓப்பனாக இன்ஸ்டா பதிவிட்ட பிரபல தமிழ் சீரியல் நடிகை!

Tamil serial actress sreenidhi interest in marrying simbu insta story getting viral

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.

தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வரும் ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார்.

Tamil serial actress sreenidhi interest in marrying simbu insta story getting viral

கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் திருப்பி பாதித்து விட்டது. அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில் நீங்கள் இருவரும் திருணம் செய்து கொள்ளலாமே என கேள்வி எழுப்புவது போல கமெண்ட் இருந்தது. அதற்கு ஸ்ரீநிதி ‘இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், எனக்கு தற்போது ஆள் இருக்கே’ என தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த ஸ்டேட்டஸ் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

Tamil serial actress sreenidhi interest in marrying simbu insta story getting viral

Share this post