மோசமான சீன்களால் Censor Board'ஏ முகம் சுளித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..

tamil movies that was beyond a certificate in censor board

தென்னிந்திய சினிமாவில் பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சென்சாருக்கு சென்று யு அல்லது ஏ சான்றிதழை பெற்று வரும். அதிலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த காட்சிகளுக்கு யு/ஏ சான்றிதழ் அல்லது ஏ சான்றுதழ் கொடுப்பார்கள். அப்படி சென்சார் போட்டையே அதிரவைத்து முகம்சுளிக்க வைத்த சில முக்கிய படங்கள் குறித்த தொகுப்பு இதோ..

சிகப்பு ரோஜாக்கள்

பாரதிராஜா இயக்கத்தில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகிய படம் சிகப்பு ரோஜாக்கள். கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்த இப்படத்தில் முத்தக்காட்சிகள், காதல் நெருக்கமான காட்சிகள் இருந்ததால் யு/ஏ சான்றிதழை பெற்றது.

உயிர்

இயக்குனர் சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் உயிர். முறையற்ற காதல் பற்றிய கதை, பாடல் காட்சிகள் கேட்பதற்கும், பார்ப்பதற்கு முகம் சுளிக்க வைக்கும் படியாக அமைத்திருப்பார்கள். இப்படத்தால் தான் ஸ்ரீகாந்த், சங்கீதாவின் கேரியர் பயங்கர ஆதி வாங்கியதாக சொல்லப்பட்டது.

சிந்து சமவெளி

தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தில் மாமனார் மருமகள் கள்ளத்தொடர்பு பற்றி நடித்ததில் பெரிய சர்ச்சையில் சிக்கியதோடு பார்ப்பவர்களை முகம் சுளிக்கவும் வைத்தது.

மிருகம்

இயக்குனர் சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா நடிப்பில் வெளியான படம் மிருகம். இப்படத்தில் படுமோசமான காட்சிகளை வைத்து ரசிகர்கள் முகம் சுளிக்கும் படி இருந்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து

2K கிட்ஸ்களின் அடல்ட் படமாக அச்சாணி போட்ட படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படம். கெளதம் கார்த்திக், யாஷிகா, வைபவி நடிப்பில் உருவாகிய இப்படம் பேய் படமாக ஆரம்பித்து முழுக்க ஆபாச காட்சிகளே அமைந்து முகம் சுளிக்க வைத்தது. இதன்பின் தான் அடல்ட் படங்கள் அதிகரிக்கத் துவங்கியது.

Share this post