நடிகர் விவேக் வாழ்ந்த வீட்டின் சாலைக்கு 'விவேக்' பெயர்: உடனே ஏற்ற முதலமைச்சர்..! மே 3ம் தேதி பெயர்ப்பலகை திறப்பு..!!

Tamil Cinema Comedy Actor Vivek Died Name Street Mkstalin

காமெடியோடு சேர்த்து சமூக அக்கறை உள்ள கருத்துக்களும் மக்களுக்கு சொன்னவர் நடிகர் விவேக். அவர் கடந்த வருடம் ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் விவேக் மனைவி மற்றும் குடும்பத்தினர் விவேக் நினைவாக அவர் வீடு இருக்கும் தெருவுக்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்,அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

Tamil Cinema Comedy Actor Vivek Died Name Street Mkstalin

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று ரமலான் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய அவர்,

1 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Share this post