பாகுபலியுடன் பொன்னியின் செல்வன் படத்தை ஒப்பிட்டு மோதிக் கொள்ளும் தமிழ் & தெலுங்கு ரசிகர்கள்..

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

இந்நிலையில், இப்படத்தையும், டீசரையும் தெலுங்கு ரசிகர்கள் பாகுபலியுடன் ஒப்பிட்டு கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனைகளை செய்தது. தெலுங்கில் வெளியான முதல் பிரம்மாண்ட படம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்த படம் Pan இந்திய அளவில் வெற்றி பெற்றது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

பாகுபலி படத்திற்கு வெற்றிக்கு பின்னரே பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்து வெளியிட்டனர். அதிலும் குறிப்பாக புஷ்பா, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களும் நேரடியாக தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி ஒரு நிலையில், பொன்னியின் செல்வன் படமும் pan இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று Pan இந்திய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுகு ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். இதற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

Tamil and telugu fans fighting between baahubali and ponniyin selvan

Share this post