என் பொண்ணுங்க Love Marriage-க்கு சம்மதிக்க மாட்டேன்.. மனம் திறந்த தேவயானியின் கணவர்..!
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து வரும் தேவயாணி, ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களின் திருமணம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேசிய பேட்டி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தொகுப்பாளர் நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகள்கள் காதலித்து திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ராஜகுமாரன், கல்யாணம் பண்ணா ஓகே தான். ஆனா, காதல் திருமணம் செய்தால் அதில் நிறைய பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நான் அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தான் ஆக வேண்டும். ஆண் பிள்ளைகளாக இருந்தால், நோ மேரேஜ் என்று கூட சொல்லி இருப்பேன் என்று ராஜகுமாரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.