விராத் கோலியுடன் டேட்டிங்?.. பல வருட வதந்திக்கு மவுனம் களைத்த தமன்னா..!

tamannaah-talk-about-rumours-of-dating-with-virat

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலமாக அறிமுகமானவர் தமன்னா. ஆனால், அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம் தான் கிடைத்தது. அடுத்தடுத்து, வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தற்போது, டாப் நடிகையாக உச்சத்தில் இருக்கிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்த தமன்னா. தற்போது, பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போடுகிறார்.

tamannaah-talk-about-rumours-of-dating-with-virat

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம் விராட் கோலி உடனான டேட்டிங் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த தமன்னா நாங்கள் இருவரும் அந்த விளம்பரத்தில் நடித்த போது நாலு வார்த்தைகள் மட்டும் பேசினோம். அவ்வளவுதான், அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவோ பேசவோ இல்லை. ஆனால், நான் பணிபுரியும் பெரும்பாலான நடிகர்களை விட அவர் சிறந்த மனிதர் என்று நான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இதன் முலம் பல வருடம் பேசு பொருளாக இருந்த டேட்டிங் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை தமன்னா வைத்துள்ளார். இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது இணையதளத்தில் இது வைரலாகி வருகிறது.

Share this post