மேடையில் தமன்னா செய்த செயல்.. டாப்ஸிக்கு இது தெரியாம போச்சே..? வைரலாகும் வீடியோ !

tamanna removes heel before light lamping and netizens scolds taapsee pannu

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக டாப் நடிகைகள் வரிசையில் இருந்து வருபவர்கள் நடிகைகள் தமன்னா - டாப்ஸி. இருவருமே சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும், வெப் சீரீஸ்களையும் தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

tamanna removes heel before light lamping and netizens scolds taapsee pannu

சமீபத்தில், மெல்பர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். அப்போது, தமன்னா, தன்னுடைய காலில் அணிந்திருந்த ஹீல்ஸை கழட்டிவிட்டு குத்து விளக்கு ஏற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, தமன்னாவின் இந்த செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

tamanna removes heel before light lamping and netizens scolds taapsee pannu

தமன்னாவுக்கு தெரிந்த இந்த மரியாதை டாப்ஸிக்கு தெரியவில்லையே என சிலர் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது தமன்னா - டாப்ஸி இருவருமே, ஹிந்தி திரையுலகில் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமன்னாவின் கைவசம் ஒரு தமிழ் படங்கள் கூட இல்லை என்றாலும், டாப்ஸி இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Share this post