அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் டி.ராஜேந்தரின் தற்போதைய நிலை.. வெளியான புகைப்படம்

T rajendar health condition photo getting viral on social media

நடிகர், இயக்குனர், பாடகர், டிஸ்ட்ரிபியூட்டர் என பல அவதாரங்களுடன் தமிழ் திரையுலகில் வலம் வருபவர் டி.ஆர். ராஜேந்தர்.

இவரை டி.ஆர். என ரசிகர்களும், திரையுலகினரும் செல்லமாக அழைப்பர். ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குனர், நடிகர், பாடகர் என அறிமுகமாகி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர்.

T rajendar health condition photo getting viral on social media

அதனைத் தொடர்ந்து, வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

25 திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ராஜேந்தர், இவரது சென்டிமென்ட் காட்சிகளுக்காகவே இவர் பேமஸ்.

T rajendar health condition photo getting viral on social media

மேலும், கவன் ‘ஹாப்பி நியூ இயர்’, தெறி ‘ராங்கு’, ஒஸ்தி ‘கலசலா’, வல்லவன் ‘அம்மாடி ஆத்தாடி’ போன்ற பிரபல பாடல்களையும் பாடியுள்ளார். அமலா, நளினி, ஜோதி, மும்தாஜ், ஜீவிதா போன்ற பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.

T rajendar health condition photo getting viral on social media

இப்படி திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்கிய, டி.ஆர். ராஜேந்தர் அவர்களின் மகன் சிலம்பரசன் என அனைவரும் அறிவர்.

தற்போது, உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், டி.ஆர். ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

T rajendar health condition photo getting viral on social media

இந்நிலையில், சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘தனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், பரிசோதனையில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால், உயர் சிகிச்சை தர வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார்’.

T rajendar health condition photo getting viral on social media

இந்த தகவல் திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது மருத்துவமனைக்கு நேரில் சென்று டி .ஆர் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

T rajendar health condition photo getting viral on social media

இந்நிலையில், டி.ராஜேந்தரை உயர்சிகிச்சைக்காக அமெரிக்க கூட்டிச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நடிகர் சிம்பு, அவசர அவசரமாக அமெரிக்கா சென்று அங்குள்ள மருத்துவமனையில் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.

T rajendar health condition photo getting viral on social media

அதன்படி டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது உடல்நிலை குறித்து பேசினார். மேலும் அவர் சிம்பு பற்றி புகழ்ந்து பேசி அழுத வீடியோ ட்ரெண்ட் ஆனது. டி.ஆர் அவர்கள் உடல்நலம் தேறி குணமுடன் வர வாழ்த்து தெரிவித்து திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் தனது மகன் சிம்பு மற்றும் மனைவியுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

T rajendar health condition photo getting viral on social media

Share this post