'விக்ரம்' படத்தில் சூர்யா சீன் இணையத்தில் லீக் ! லீக்கான வீடியோவால் வெளியான சூர்யாவின் ரோல் குறித்த சீக்ரெட் !

Surya scenes from vikram movie got leaked on social media video getting viral

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

Surya scenes from vikram movie got leaked on social media video getting viral

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. உண்மையில் இன்றுடன் தான் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைய உள்ளதாகவும் கிட்டத்தட்ட மூன்று கோடி செலவில் உருவாக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.

வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட் கொண்ட விக்ரம் படத்தில் கமலின் மகனாக சூர்யா நடித்துள்ளாராம்.

அதுவும் கிளைமாக்ஸில் பாகுபலி ஸ்டைலில் சூர்யா வருவார் என்று கூறப்பட்டு வந்தது . இந்நிலையில், தற்போது விக்ரம் ஷூட்டிங் சீன்ஸ் என சூர்யா வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும், சூர்யா கமல் ஹாசன் சந்திக்கும் வீடியோ ஒன்றும் வைரல் ஆகி வருகிறது.

Surya scenes from vikram movie got leaked on social media video getting viral

ஏற்கனவே டீ ஏஜிங் கான்செப்ட் முறையில் கமல்ஹாசனை இளமையான தோற்றத்தில் கொண்டு வர லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்ததாகவும், அந்த காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்பதால் இளம் வயது கமலாக சூர்யாவை காட்டும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.

Share this post