கமலின் விக்ரம் படத்துல இந்த தமிழ் பட நடிகர்களா ? சஸ்பென்ஸ் வேற லெவல் ! சம்பவம் loading !

Surya karthi to act in cameo appearance in vikram movie

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, கமல் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Surya karthi to act in cameo appearance in vikram movie

வரும் ஜுன் 3ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளியதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட ஏராளமானனோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Surya karthi to act in cameo appearance in vikram movie

10 கோடி செலவில் De Aging டெக்னாலஜி மூலம் கமலை 1980களில் இருந்தது போல இளமை தோற்றத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் காட்ட போகிறார்கள் என்ற தகவல் வெளியானது. மேலும், படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த போவதாகவும் கூறப்படுகிறது.

Surya karthi to act in cameo appearance in vikram movie

அடுத்ததாக, விக்ரம் படத்தின் டிரைலரை மே 18ம் தேதி பிரான்சில் நடைபெற உள்ள 75வது Cannes 2022 திரைப்பட விழாவில் வெளியிட போவதாக அறிவித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்றின் டிரைலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

Surya karthi to act in cameo appearance in vikram movie

விக்ரம் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தில் சூர்யா மற்றும் கார்த்தியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Surya karthi to act in cameo appearance in vikram movie

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் தர வேண்டும் என்பதற்காக இந்த தகவலை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கமலின் விக்ரம்-ஆ அல்லது நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தில் சூர்யா-கார்த்தி நடித்துள்ளார்களா என சில குழப்பங்களும் எழுந்துள்ளன.

Share this post