சாய் பல்லவியுடன் சூர்யா - ஜோதிகா சர்ப்ரைஸ் கூட்டணி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

இதன் பின்னர், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

இதன் நடுவே, சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, ஷிவானி, மஹேஸ்வரி, காளிதாஸ் ஜெயராம் என ஒரு ரசிகர் பட்டாளமே நடித்தது. இதில் எதிர்பாராத சஸ்பென்ஸ் விதமாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தனது மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

தற்போது சூர்யா 41, சூரரைப் போற்று இந்தி ரீமேக் என ஏராளமான படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனம், சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. இப்படத்தை ரிச்சி பட இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் இப்படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி உள்ளதது.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

இப்படம் குறித்து சூர்யா கூறியுள்ளதாவது: “நானும் ஜோதிகாவும், கார்கி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. இந்த படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புதிய சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கு கார்கி பிடிக்கும் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Surya jyothika to produce sai pallavi karki movie on 2d entertainment

Share this post