நீங்க பண்ணியதுல மோசமான படம் சூர்யா வைத்து இதுதான்.. என கூறிய சூர்யா ரசிகருக்கு அவரே வெளியிட்ட பதிவு..

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் வெங்கட் பிரபு. கங்கை அமரன் அவர்களின் மகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பினால், திரையுலகில் தற்போது தனக்கென்ற இடத்தை உருவாக்கியுள்ளார். சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படமே தாறுமாறாக ஹிட் அடித்தது.

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

அப்படத்தை தொடர்ந்து, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்தார். அதிலும், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் செம ஹிட் ஆகி ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். அதன் பின்னர், பிரியாணி மற்றும் மாஸ் திரைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

சென்னை 600028 2, லைவ் டெலிகாஸ்ட் படங்களை இயக்கிய இவர், கடந்த ஆண்டு சிம்புவிற்கு மாநாடு மூலம் பெரிய ரீஎண்ட்ரி கொடுத்தார். தனது இயக்கத்திற்கு மீண்டும் ஒரு ரீஎண்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபு, தற்போது பார்ட்டி என்னும் படத்தை இயக்கி வருகிறார். சில படங்களில், நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்தது அடுத்து, நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு, ரசிகர் ஒருவர், “நீங்கள் பண்ணத்திலே மோசமான திரைப்படம் மாஸ் தான், சூர்யா ரசிகரான எனக்கே அது பிடிக்கல” என பதிவிட்டுள்ளார்.

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “அடுத்த முறை சூர்யா அண்ணாவின் படத்தை இயக்கினால் உங்கள் எதிர்பார்ப்பை மொத்தமாக பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்” என பதிவிட்டுள்ளார்.

Surya fan slams venkat prabu for mass film and tweet getting viral

Share this post